ADDED : மார் 22, 2026 04:27 PM

அ நிறம் | அளவு
தஞ்சாவூர் : தஞ்சாவூரில், பார்சல் சர்வீஸ் மையத்தில், ஆவணங்களின்றி, கிடந்த ஆயிரம் சில்வர் டப்பாக்களை பறக்கும் படையினர், நேற்று மாலை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர், வ.உ.சி. நகரிலுள்ள, பார்சல் சர்வீஸ் மையத்தில், மூட்டைகளில் சில்வர் டப்பாக்கள் இருப்பதாக, தஞ்சாவூர் தொகுதி பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, பறக்கும் படை அலுவலர் ஜேக்கப் வினோத் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர்.
அதில், ஆறு மூட்டைகளில், சுமார் 1,000 சில்வர் டப்பாக்கள் இருந்ததும், அதற்குரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, அந்த மூட்டைகளை, பறக்கும் படையினர் கைப்பற்றி, தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து சில்வர் டப்பாக்கள் யாருடையது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
