/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
135 நாட்கள் லீவும் போச்சு... சம்பளமும் போச்சு... அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் புலம்பல்
/
135 நாட்கள் லீவும் போச்சு... சம்பளமும் போச்சு... அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் புலம்பல்
135 நாட்கள் லீவும் போச்சு... சம்பளமும் போச்சு... அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் புலம்பல்
135 நாட்கள் லீவும் போச்சு... சம்பளமும் போச்சு... அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் புலம்பல்
ADDED : நவ 12, 2024 11:40 PM

சிவகங்கை : கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு 135 நாட்கள் விடுப்பு சம்பளம் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் கும்பகோணம், நாகபட்டினம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 6 மண்டல அலுவலகங்கள் உள்ளன. மண்டல, கிளை அலுவலகங்களில் மேலாளர், டெக்னீசியன், கிளார்க், டிரைவர், கண்டக்டர் என 15,000 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் விடுப்பு எடுக்காமல் பணிபுரியும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 நாட்கள் வீதம் விடுப்பிற்கான சம்பளமாக (யேர்ன் லீவ்) மாற்றி வழங்கப்படும்.
2011 முதல் 2019 வரை விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்த ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 135 நாட்களுக்கான சம்பளம் விடுவிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.95,000 முதல் 1.20 லட்சம் வரை கிடைக்கும். ஆனால் இதுவரை அதற்கான சம்பளத்தை போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்கவில்லை. ஏற்கனவே இருந்த நிர்வாக இயக்குனர் சம்பள விடுப்பை கழித்து விட்டு நிதி இருக்கும் போது தருவதாக உறுதி அளித்தார். அதன்படி விடுப்பை மட்டும் கழித்து விட்டனர். ஆனால் இதுவரை அதற்கான சம்பளத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். சம்பள விடுப்பை கழித்து விட்டதால் இனிமேல் விடுப்பு எடுத்தால் சம்பள இழப்பு ஏற்படும் என கிளை மேலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
135 நாட்கள் லீவும் போச்சு... அதற்கான சம்பளமும் போச்சு....என அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், கண்டக்டர், டிரைவர்கள் புலம்பி வருகின்றனர்.
பணிஓய்வில் விடுப்பு சம்பளம்:
அண்ணா தொழிற்சங்க காரைக்குடி மண்டல தலைவர் வி.நடராஜன் கூறியதாவது: தற்போதைய நிர்வாக இயக்குனர் கழிக்கப்பட்ட 135 நாட்களுக்கான விடுப்பு சம்பளத்தை நிதி நிலைமை சீராகும் போது தருவதாக கூறியுள்ளார். இல்லாத பட்சத்தில் பணி ஓய்வின் போது மொத்தமாக தருவதாக உறுதி அளித்து, அந்த விடுப்பு சம்பளத்தை பணிப்பதிவேட்டில் (எஸ்.ஆர்., புத்தகம்) ஏற்றியுள்ளதாக உறுதி அளித்துள்ளார். அதற்குரிய நிர்வாகம் சார்ந்த கடிதமும் ஒவ்வொரு ஊழியருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.