/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பைனான்ஸ் ஊழியர், நண்பர் கைது
/
17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பைனான்ஸ் ஊழியர், நண்பர் கைது
17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பைனான்ஸ் ஊழியர், நண்பர் கைது
17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பைனான்ஸ் ஊழியர், நண்பர் கைது
ADDED : செப் 29, 2024 11:39 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், ராஜாமடம் பகுதியில், 17 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு அழுது கொண்டிருந்த நிலையில், அப்பகுதி மக்கள் மீட்டு அதிராம்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்து, பட்டுக்கோட்டைக்கு இளம்பெண்ணை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்பெண், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் பெண்ணின் தந்தை மன்னார்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார். கடன் தொடர்பாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சாத்தனுாரைச் சேர்ந்த முத்துபாண்டியன், 28, பெண்ணின் தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசும்போது, அவரது மகள் போனை எடுத்து பேசுவது வழக்கம், இதில், முத்துபாண்டியனுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முத்துபாண்டியன் கடன் வாங்கிய பெண்ணின் தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது மகள் கூறிய நிலையில், நிறுவனத்துக்கு வந்து தகவலை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
கடன் வாங்கியவர் தன் 17 வயது மகளை மன்னார்குடிக்கு அனுப்பியுள்ளார். மன்னார்குடி வந்த பெண்ணை முத்துபாண்டியன் தனியாக அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். நம்பிய சிறுமியும் முத்து பாண்டியன் அழைத்ததால், அவருடன் டூ - வீலரில் ஏறி உள்ளார்.
அப்போது, முத்து பாண்டியன் நண்பர் தவசீலன், 25, டூ - வீலரின் பெண்ணின் பின்னால் அமர்ந்து, பெண்ணை கடத்தி வந்து, ராஜாமடம் அக்னி ஆறு பகுதியில் கூட்டு பாலியலில் ஈடுபட்டுள்ளனர். பின், அந்த பெண்ணை அங்கேயே விட்டு சென்றது தெரியவந்தது.
இளம்பெண்ணை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, முத்துபாண்டியன், தவசீலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.