/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அ.தி.மு.க., - ஐ.டி., விங் நிர்வாகி போக்சோ வழக்கில் கைது
/
அ.தி.மு.க., - ஐ.டி., விங் நிர்வாகி போக்சோ வழக்கில் கைது
அ.தி.மு.க., - ஐ.டி., விங் நிர்வாகி போக்சோ வழக்கில் கைது
அ.தி.மு.க., - ஐ.டி., விங் நிர்வாகி போக்சோ வழக்கில் கைது
ADDED : அக் 31, 2024 03:35 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பண்ணவயல் கிராமத்தை சேர்ந்தவர் தீபன், 33. இவர், அ.தி.மு.க., தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலராக, கடந்த இரு நாட்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமி ஒருவரை, தொடர்ந்து கிண்டல் செய்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அந்த சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த போது, அவரை வழிமறித்து கிண்டல் செய்து, தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் இரவில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரில், போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ், இரண்டு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து, தீபனை நேற்று கைது செய்தனர்.