/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
நா.த.க., நிர்வாகி, 7 பேர் கைது அ.தி.மு.க., பேச்சாளருக்கு வலை
/
நா.த.க., நிர்வாகி, 7 பேர் கைது அ.தி.மு.க., பேச்சாளருக்கு வலை
நா.த.க., நிர்வாகி, 7 பேர் கைது அ.தி.மு.க., பேச்சாளருக்கு வலை
நா.த.க., நிர்வாகி, 7 பேர் கைது அ.தி.மு.க., பேச்சாளருக்கு வலை
ADDED : மார் 09, 2024 12:53 AM
கும்பகோணம்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 30; கொத்தனார். இவர், தன் பெற்றோருடன், சகோதரி வீட்டில் வசிக்கிறார். இவரது தம்பி சுபாஷ், துபாயில் வேலை பார்க்கிறார். கடந்த 6ம் தேதி பாலக்கரையைச் சேர்ந்த சித்திரவேலு, முருகன் உள்ளிட்ட சிலர், சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்து, அவரது தம்பி சுபாஷ் குறித்து கேட்டு, அவரை காரில் கடத்திச் சென்று தாக்கி, தப்பினர். சுரேஷ்குமார், போலீசில் புகார் அளித்தார்.
கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி, ராணிப்பேட்டை, மேல்விசாரம் நகரைச் சேர்ந்த சல்மான், 32, அவரது மாமியார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரயினாபேகம், 52, உட்பட ஒன்பது பேர் தான் சுரேஷ்குமாரை கடத்தியது என்பதை அறிந்தனர்.
ரயினாபேகம், நாகப்பட்டினம் அ.தி.மு.க., பேச்சாளராகவும், சல்மான் ராணிப்பேட்டையில், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். சல்மான் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரயினா பேகத்தை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சுரேஷ்குமாரை கடத்திய கும்பல், அவரது தம்பி சுபாஷ், 100 சவரன் நகையை, துபாயில், பாசித் என்பவரிடமிருந்து வாங்கி, தராமல் ஏமாற்றி விட்டதாகக் கூறி சுரேஷ்குமாரை தாக்கியது தெரிந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

