/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வெளி மாவட்டங்களில் நெல் அரவை அரிசி ஆலை முகவர்கள் போராட்டம்
/
வெளி மாவட்டங்களில் நெல் அரவை அரிசி ஆலை முகவர்கள் போராட்டம்
வெளி மாவட்டங்களில் நெல் அரவை அரிசி ஆலை முகவர்கள் போராட்டம்
வெளி மாவட்டங்களில் நெல் அரவை அரிசி ஆலை முகவர்கள் போராட்டம்
ADDED : பிப் 21, 2024 06:38 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அரிசி ஆலை முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை, வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் அரவை மில்களுக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் வழங்க கூடாது என, வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட அரவை மில் முகவர்கள் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில், 103 தனியார் அரவை மில் முகவர்கள், மில்களை இயக்கி வருகின்றனர். ஒவ்வொரு மில்லையும் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, நவீனப்படுத்தி வைத்துள்ளோம். நெல் அரவை பணிக்காக, 2,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்தாண்டு கொள்முதல் செய்த, 6 லட்சம் டன் நெல்லில், வெறும், 50,000 டன் மட்டுமே உள்ளூரில் அரவைக்கு வழங்கியுள்ளனர்.
இதனால், இயந்திரங்கள் பழுது, தொழிலாளர்களுக்கு வேலையின்மை போன்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
அரசு டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை, டெல்டா மாவட்டங்களில் உள்ள தனியார் அரவை மில்களுக்கு மட்டுமே அரவைக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

