/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பேராவூரணி இளைஞரை மணந்த வங்கதேச பெண்
/
பேராவூரணி இளைஞரை மணந்த வங்கதேச பெண்
ADDED : பிப் 11, 2025 05:35 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி- - இளமதி தம்பதியின் மகன் குலோத்துங்க சோழன், 36. மலேஷியாவில் பணியாற்றுகிறார்.
இவருக்கும் கிழக்காசிய நாடான, வங்கதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராதா மதாப் சர்மா -- அனிதா சர்மா தம்பதியின் மகளுமான அனிலா சர்மா, 27, என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண், பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். குலோத்துங்க சோழன் -- அனிலா சர்மா காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று பேராவூரணியில், இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. மணமகன் பட்டு வேட்டி, பட்டு சட்டையும், மணமகள் பட்டுப்புடவையும் அணிந்து வந்தனர். திருமணத்தில் இரு வீட்டாரும் பங்கேற்றனர்.