ADDED : ஜூன் 28, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆட்டோ நக ரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி காமாட்சி. தம்பதிக்கு ஏகாம்பரம், 9, கோகுல், 3, என, இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுக்கு முன் கார்த்திக் இறந்து விட்டார்.
நேற்று காலை, கோகுலுடன் வீட்டு வேலைக்கு காமாட்சி சென்றார். பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் ஏகாம்பரம் மட்டும் இருந்தார். குடிசை வீட்டின் கூரை எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்தது.
இதில், துாங்கிக்கொண்டிருந்த ஏகாம்பரம், உடல் கருகி உயிரிழந்தார். வேளாண் துறை அமைச்சர் வினோத், சிறுவன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
