ADDED : அக் 05, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, தாராசுரத்தை சேர்ந்த காளிதாஸ் மகன் சிவபாலன், 12; கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தார்.
நேற்று முன்தினம் மாலை, சிவபாலன் தன் நண்பர்களுடன் அரசலாற்றில் குளித்தார். எதிர்பாராத விதமாக சிவபாலன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் தேடிய நிலையில், நேற்று மாலை, புதரில் சிக்கிய நிலையில், சிவபாலன் உடலை மீட்டனர். கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.