ADDED : மார் 14, 2026 03:00 AM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: எட்டு வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்த கொத்தனார், 'போக்சோ'வில் நேற்று கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நெடுந்தெரு கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 34; கொத்தனார். மகள் முறை கொண்ட இரண்டாம் வகுப்பு படிக்கும், 8 வயது சிறுமிக்கு, இவர், இரு ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
சமீப காலமாக சிறுமி சோகத்துடன் காணப்பட்டார். இது குறித்து பள்ளி ஆசிரியர் விசாரித்ததில், சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி வந்தது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர், அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் கூறியதைடுத்து, அவர்கள் பாபநாசம் மகளிர் போலீசில், பாபு மீது நேற்று முன்தினம் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில், பாபுவை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
