/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் உருவபொம்மை எரிப்பால் பரபரப்பு
/
தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் உருவபொம்மை எரிப்பால் பரபரப்பு
தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் உருவபொம்மை எரிப்பால் பரபரப்பு
தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் உருவபொம்மை எரிப்பால் பரபரப்பு
ADDED : பிப் 16, 2024 03:59 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகே மேகதாது அணைக்கு அனுமதி பெற, சூழ்ச்சியாக செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரின் உருவபொம்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு துணை நிற்கும் மத்திய அரசையும், அதற்குத் துணையாக இருந்து சூழ்ச்சி செய்து வரும் ஹல்தரையும், பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.இதற்கிடையில் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, மறைத்து வைத்திருந்த ஹல்தரின் உருவபொம்மையை எரித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.