/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி
/
மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி
ADDED : பிப் 20, 2025 01:32 AM
தஞ்சாவூர்:குளத்தின் கரையில் விளையாடி கொண்டிருந்த, 5 வயது சிறுமி, குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன். இவரது மகள் காவியா, 5. இவர் நேற்று தன் சக நண்பர்கள் ஐந்து பேருடன் மகாமக குளத்தின், கீழ்கரையில் உள்ள அபிமுகேஸ்வரர் சுவாமி பகுதியில், குளக்கரையில் விளையாடினார்.
அப்போது, காவியா எதிர்பாராத விதமாக குளத்தின் படிக்கட்டில் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். மற்ற சிறுவர்கள் காவியா தண்ணீரில் விழுந்து விட்டதாக கதறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் தேடி, காவியாவின் உடலை மீட்டனர்.
சிறுமி இறப்பு குறித்து, மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

