/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கார் - லாரி மோதல் கோவை தம்பதி பலி
/
கார் - லாரி மோதல் கோவை தம்பதி பலி
ADDED : அக் 17, 2025 07:46 PM

தஞ்சாவூர்: கார் -- லாரி நேருக்கு நேர் மோதியதில், திருக்கடையூர் கோவிலுக்கு வந்த தம்பதி பலியாகினர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குமரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60. இவரது மனைவி கலாவதி, 56. இவர்களின் மகன் ராகேஷ், 35, மருமகள் ராஜேஸ்வரி, 28.
சுப்பிரமணி தம்பதிக்கு, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில், சஷ்டியப்த பூர்த்தி செய்வதற்காக காரில் சென்றனர். பொள்ளாச்சியை சேர்ந்த அஷ்தர் அலி, 46, காரை ஓட்டினார்.
நேற்று அதிகாலை, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டை பகுதியில், கார் வந்த போது, மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணத்தில், தேங்காய் லோடு ஏற்ற வந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், காரில் பயணம் செய்த சுப்பிரமணி, கலாவதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த ராகேஷ், ராஜேஸ்வரி, டிரைவர் அஷ்தர் அலி ஆகியோரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
லாரியில் இருந்த திருவாலங்காடை சேர்ந்த நீதிமோகன், 45, சுமதி, 45, கலாவதி, 45, ஆகிய மூவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
திருநீலக்குடி போலீசார், லாரி டிரைவரான, தென்காசி மாவட்டம், புளியங்குடியை சேர்ந்த மாரிதுரை, 49, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.