/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கல்லுாரி பஸ்- -- லோடு வேன் மோதல்: இருவர் பலி; மாணவர் 17 பேர் காயம்
/
கல்லுாரி பஸ்- -- லோடு வேன் மோதல்: இருவர் பலி; மாணவர் 17 பேர் காயம்
கல்லுாரி பஸ்- -- லோடு வேன் மோதல்: இருவர் பலி; மாணவர் 17 பேர் காயம்
கல்லுாரி பஸ்- -- லோடு வேன் மோதல்: இருவர் பலி; மாணவர் 17 பேர் காயம்
ADDED : அக் 15, 2024 06:59 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் முகமது சமீர், 27. மூப்பகோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 28; இருவரும் கும்பகோணத்தில் உள்ள மலர் அங்காடியில் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று காலை, கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை பகுதிக்கு, லோடு வேனில் பூ ஏற்றி சென்றனர்.
அப்போது, கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லுாரி பஸ், ஆடுதுறையில் இருந்து மாணவ - மாணவியரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் நோக்கி சென்றது. கோவிந்தபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து, சாலையில் இழுத்து சென்று, எதிரே வந்த லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில், லோடு வேனை ஓட்டி வந்த கார்த்தி, உதவியாளர் முகமது சமீர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும், கல்லுாரி பஸ்சை ஓட்டி வந்த, மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பகுதியை சேர்ந்த முத்துராமன், 34, உட்பட பஸ்சில் இருந்த 17 மாணவ - மாணவியர் லேசாக காயமடைந்தனர்.
அருகில் இருந்தோர் திருவிடைமருதுார் போலீசாருக்கு தகவல் அளித்து, காயமடைந்த மாணவ - மாணவியரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து, திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.