/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கல்லுாரி மாணவி தற்கொலை பால் வியாபாரிக்கு 'கம்பி'
/
கல்லுாரி மாணவி தற்கொலை பால் வியாபாரிக்கு 'கம்பி'
ADDED : ஜூலை 05, 2025 02:44 AM

தஞ்சாவூர்:திருமணம் செய்து கொள்ள டார்ச்சர் கொடுத்ததால், மாணவி தற்கொலை செய்ததையடுத்து பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், நரசிங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 19; பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவி.
இவரது பெற்றோர் மாடு வளர்த்து வந்துள்ளனர். சில மாதங்களாக புவனேஸ்வரி, அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான குணசேகரன், 30, வீட்டில் பால் ஊற்றி வந்துள்ளார்.
குணசேகரனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், குணசேகரன் சில நாட்களாக, புவனேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள கூறி, தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
மனமுடைந்த புவனேஸ்வரி ஜூலை 2ல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை நேற்று கைது செய்தனர்.