/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மதம் மாற வலியுறுத்தி பேசுவதா தி.க., நிர்வாகி மீது புகார்
/
மதம் மாற வலியுறுத்தி பேசுவதா தி.க., நிர்வாகி மீது புகார்
மதம் மாற வலியுறுத்தி பேசுவதா தி.க., நிர்வாகி மீது புகார்
மதம் மாற வலியுறுத்தி பேசுவதா தி.க., நிர்வாகி மீது புகார்
ADDED : ஆக 06, 2025 03:26 AM
தஞ்சாவூர்:ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியவர் மீது நடவடிக்கை கோரி, ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர்.
கும்பகோணம், பழைய மீன் மார்க்கெட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, குடந்தை கத்தோலிக்க துறவியர் பேரவை சார்பில், சத்தீஸ்கர் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரி களின் கைதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் மாநகர தி.க., செயலர் ரமேஷ் பேசுகை யில், ''ஹிந்து மதத்தில் பல்வேறு ஜாதி பிரிவுகள் உள்ளன. மதத்துக்குள்ளேயே ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. அப்படி இருப்பதைக் காட்டிலும், மதம் மாறி ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக் கலாம். ஹிந்து மதத்தில் வேசி மகனாக இருப்பதை விட, சுயமரியாதை உள்ள மனிதனாக, வேற்று மதத்தில் இருக்கலாம்,'' என, பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, நேற்று காலை, ஹிந்து மக்கள் கட்சி பொதுச் செயலர் குருமூர்த்தி தலைமையில், துணை தலைவர் பாலா, அகில பாரத ஹிந்து மகா சபா மாநில பொதுச்செயலர் ராம நிரஞ்சன், அகில இந்திய ஹிந்து பார்வார்டு பிளாக் நிர்வாகி ரமேஷ், சிவசேனா மாநில நிர்வாகி ஆனந்த், பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஹிந்து அமைப்பினர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர்.
குருமூர்த்தி கூறுகையில், ''ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் இழிவு படுத்துவது மட்டுமின்றி, கட்டாய மதமாற்றத்திற்கு துாண்டும் வகையிலும், சமூக மோதல்களை உருவாக்கும் வகையிலும் பேசிய ரமேசை கைது செய்ய வேண்டும். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.