தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ கட்டடங்களில் சிக்கிய தோரணங்கள் தேரோட்டத்தில் பக்தர்கள் வேதனை

 கட்டடங்களில் சிக்கிய தோரணங்கள் தேரோட்டத்தில் பக்தர்கள் வேதனை

 கட்டடங்களில் சிக்கிய தோரணங்கள் தேரோட்டத்தில் பக்தர்கள் வேதனை


ADDED : ஏப் 30, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டத்தில், தொம்பை தோரணங்கள் அருகிலுள்ள கட்டடங்களில் சிக்கியதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 'பூலோக வைகுண்டம்' என, போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி கோவி லில், சித்திரை பெருவிழா தேரோட்டம், நேற்று காலை 8:45 மணியளவில் நடந்தது.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளிய தேரை, 'சாரங்கா... சாரங்கா...' கோஷம் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவா ரூ ர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேருக்கும் இணையாக, 28 அடி உயரம், 40 அடி அகலம், 500 டன் எடை, 110 அடி உயரம் கொண்ட தேர் அலங்காரம் போன்ற சிறப்புகளால், தமிழகத்தில், மூன்றாவது பெரிய தேராக இது திகழ்கிறது.

தேர், நிலையில் இருந்து வீதியில் அசைந்தாடி வந்தபோது, தேரில் கட்டப்பட்டிருந்த தொம்பை தோரணங்கள், கட்டடங்களில் சிக்கின. இதில், கீழவீதியில் உள்ள கடையின் முகப்பு சேதமடைந்தது. பின், கோவில் பணியாளர்கள், தோரணங்களை பாதுகாப்பாக பிரித்து, சீரமைத்தும், மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.

பக்தர்கள் கூறுகையில், 'தேரோடும் வீதிகளை ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டப்பட்டதால், தேரின் அளவை சுருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும், தேர் பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டதால், தோரணங்கள் கட்டடங்களில் சிக்கின. இது வேதனை தருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us