/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கணவன், மகன் மாயம் டூவீலரில் சென்ற போது பரிதாபம் : ஆற்றில் விழுந்ததில் பெண் மீட்பு
/
கணவன், மகன் மாயம் டூவீலரில் சென்ற போது பரிதாபம் : ஆற்றில் விழுந்ததில் பெண் மீட்பு
கணவன், மகன் மாயம் டூவீலரில் சென்ற போது பரிதாபம் : ஆற்றில் விழுந்ததில் பெண் மீட்பு
கணவன், மகன் மாயம் டூவீலரில் சென்ற போது பரிதாபம் : ஆற்றில் விழுந்ததில் பெண் மீட்பு
ADDED : ஆக 06, 2011 02:18 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டூவீலரில் சென்ற குடும்பத்தினர் ஆற்றில் விழுந்ததில் பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.
தண்ணீரில் இருவர் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மகர்நோம்பு சாவடி ஒன்றாம் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). இவர் நெசவுத்தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது மனைவி சர்மிளா(35) மகன் அரவிந்தன் (11). இவர்கள் மூவரும் பஜாஜ் காலிபர் டூவீலரில் தஞ்சாவூர் சாந்தப்பிள்ளை கேட் அருகே புது ஆற்றங்கரையில் உள்ள சிவா விஷ்ணு கோவிலுக்குச் சென்று விட்டு நேற்றிரவு 7 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, எதிரே கார் வந்ததால், ஆற்றங்கரையோரம் டூவீலரை ஒதுக்கியுள்ளார். டூவீலர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தில் மூவரும் கல்லணைக் கால்வாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீரில் குதித்து மூவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். இதில், தண்ணீரில் தத்தளித்த சர்மிளாவை மட்டும் மீட்க முடிந்தது. பிரகாஷ், அரவிந்தன் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்களை மீட்க முடியவில்லை. உடனடியாக தஞ்சை தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரையும் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இரவு நேரம் என்பதால் மீட்டு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.