/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
/
அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
ADDED : ஆக 22, 2011 02:08 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள பாரதிநகர் தெற்கு நகர் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறை வு விழா இஷாசித்தி விநாயகர்கோவில் தியான மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு முø னவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். புலவர் சீத்தா சத்தியமூர்த்தி வரவேற்றார். குமரவேல் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மா ணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சங்கத்தின் துணைத்தலைவர் எம். பழனியாண்டி நகரின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை படித்தார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ராஜ்யசபா உறுப்பினர் மணிசங்கரய்யர் நிதியில் காந்திஜிதெருவில் வடிகால் அø மப்பதற்கு ரூ.3.50லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நிர்வாக அனுமதிபெற்று உடன் வடிகால் வசதியினை ஒன்றிய ஆணையர் செய்துதரவேண்டுவது. தினந்தோறும் 200 வாகனங்களுக்கு மேல் சென்று வரும் காந்திஜிதெருவினை 2012-13ம் ஆண்டிற்கு அரசு சிறப்பு நிதி மூலம் சிமெண்ட் சாலை அமைத்து தரவேண்டுவது. பழவாத்தான்கட்டளை ஊராட்சி பிள்ளையார்கோவில் தெரு, வ.உ.சி.தெரு, வள்ளலார்தெரு, சோழன்தெரு, அன்னைதெரசாதெரு ஆகிய சாலைகள் சிமெண்ட் சாலைகளாக தரம் உயர்த்தப்படவேண்டுவது.
லால்பகதூர் சாஸ்திரி தெரு மேற்குபகுதி, அண்ணாதெரு, பாரதிதாசன்தெரு ஆகிய தெருக்களுக்கு வடிகால் வசதி இல்லாததால் உடன் செய்துதர நடவடிக்கை வேண்டுவது. பாரதிநகர் தெற்கில் மின்மாற்றியினை உயர்சக்திகொண்ட மின்மாற்றியாக மாற்றித்தரவேண்டுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.