/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மருத்துவக்கல்லூரி டாக்டர்களுடன் அமைச்சர், கலெக்டர் ஆலோசனை
/
மருத்துவக்கல்லூரி டாக்டர்களுடன் அமைச்சர், கலெக்டர் ஆலோசனை
மருத்துவக்கல்லூரி டாக்டர்களுடன் அமைச்சர், கலெக்டர் ஆலோசனை
மருத்துவக்கல்லூரி டாக்டர்களுடன் அமைச்சர், கலெக்டர் ஆலோசனை
ADDED : ஆக 22, 2011 02:11 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் மருத்துவக்கல்லூரி முதல்வர், டாக்டர்கள், கலெக்டர் பாஸ்கரன் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குடி தண்ணீர் வசதி ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் தேவைப்படுவதால், ஆழ்குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் தொட்டி அமைத்து அதன் மூலம் விநியோகிப்பது தொடர்பாகவும், கூடுதல் சிடி ஸ்கேன் வசதி, லிப்ட் வசதி புதுப்பித்தல், கழிவு நீர் பாதாள சாக்கடை சரி செய்தல், மருத்துவக்கல்லூரிக்கு தனி மின்மாற்றி அமைத்தல் ராஜா, மிராசுதார் மருத்துவமனைக்கு புதிய சி.டி., ஸ்கேன் வழங்குதல் போன்ற மேம்பாட்டு வசதிகள் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவ அலுவலர்களுகடன் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் கலந்தாய்வு நடத்தினார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புற நோயாளிகளைபி ரிவு, புதிய உள் நோயாளிகள்பிரி வுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தா ர். தொடர்ந்து மருத்துவக்கல்லூ ரி வளாகத்துக்குள் நுழைவு வா யில் முன்பாக பஸ் ஸ்டாண்ட் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.,க்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, டீன் உமாதேவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) கலைச்செல்வன் மற்றும் மருத்துவர்கள் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.