/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அடிப்படை வசதி வேணும் விடுதி மாணவர்கள் கலெக்டரிடம் மனு
/
அடிப்படை வசதி வேணும் விடுதி மாணவர்கள் கலெக்டரிடம் மனு
அடிப்படை வசதி வேணும் விடுதி மாணவர்கள் கலெக்டரிடம் மனு
அடிப்படை வசதி வேணும் விடுதி மாணவர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : செப் 24, 2011 12:53 AM
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி புரட்சிகர மாணவர் முன்னணியினர் மற்றும் சரபோஜி ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் நேற்றுமுன்தினம் காலை கலெக்டர் பாஸ்கரனிடம் மனு கொடுக்க வந்தனர்.
மாணவர்களுக்கு விடுதியில் நூலக வசதி, சுகதாராமான குடிநீர், சுகாதாரமான சத்தான உணவு, சாக்கடை குழாய்களை சீரமைத்து தர வேண்டும். விடுதிக்கு சுண்ணாம்பு பூச்சு, படுக்கை வசதி, விளையாட்டு சாதனங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை கலெக்டர் பாஸ்கரனிடம் மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் ஆய்வுக்காக சென்றிருந்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த மாணவர்கள் மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.