/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கேள்வி கேட்ட தி.மு.க., கவுன்சிலர்கள்; நெஞ்சு வலி என சரிந்த காங்., மேயர்
/
கேள்வி கேட்ட தி.மு.க., கவுன்சிலர்கள்; நெஞ்சு வலி என சரிந்த காங்., மேயர்
கேள்வி கேட்ட தி.மு.க., கவுன்சிலர்கள்; நெஞ்சு வலி என சரிந்த காங்., மேயர்
கேள்வி கேட்ட தி.மு.க., கவுன்சிலர்கள்; நெஞ்சு வலி என சரிந்த காங்., மேயர்
ADDED : டிச 30, 2024 11:39 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில், மேயர் சரவணன் தலைமையில், சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி: கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு மேயர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
மேயர் சரவணன்: மாநகராட்சி கூட்டம் நாளை நடத்தப்படும். அப்போது கோப்புகள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, கூட்டம் நிறைவடைந்தது.
அவர், நாற்காலியை விட்டு எழுந்து தன் அறைக்கு செல்ல முயன்றார்.
கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி: விவாதம் நடக்கும் போதே மேயர் சரவணன் கூட்டம் முடிந்து விட்டது என்று கூறி செல்வது சரியில்லை. நாங்கள் கோப்புகளை பார்க்காமல் செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியவாறு, மேயர் முன் அமர்ந்து கூச்சலிட்டார். தொடர்ந்து, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, மேயர் சரவணன் திடீரென நெஞ்சு வலிப்பதாகவும், காப்பாற்றுங்கள் என கோஷமிட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து உருண்டார்.
உடனே அங்கிருந்த கவுன்சிலர்கள் மேயர் சரவணனை கைப்பிடித்து எழுப்பி, அவரது அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
'மேயரிடம் கேள்வி கேட்டதற்கு நெஞ்சு வலிப்பதாக நாடகமாடுகிறார்' என, தி.மு.க., கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.