/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கோழி தகராறில் முதியவர் கொலை: மூன்று பேர் கைது
/
கோழி தகராறில் முதியவர் கொலை: மூன்று பேர் கைது
ADDED : நவ 25, 2024 03:39 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேனாம்படுகையை சேர்ந்தவர் முருகையன், 84. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீரமணி.
இவரது கோழி, முருகையன் வீட்டில் உள்ள, கோழிகளை அடைக்கும் பட்டியில் வந்து தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், அது யார் கோழி என்பது முருகையனுக்கு தெரியாது என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முருகை யன் வீட்டிற்கு வந்த வீரமணி, தன் கோழியை தரும்படி கேட்டார். அதற்கு முருகையன், 'மகன் வந்தவுடன் கேட்டு விட்டு தருகிறேன்' என கூறினார். ஆத்திரமடைந்த வீரமணி, முருகையனிடம் தகராறு செய்தார்.
அப்போது, வீரமணி மனைவி செல்வராணி, 52, அவரது மகன்கள் பாரதி, 23, பாபுராஜ், 29, ஆகியோர், முருகையனை தாக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே முருகையன் இறந்தார்.
பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரமணி மனைவி செல்வராணி, மகன்கள் பாரதி, பாபுராஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.