/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
செந்தில் பாலாஜி உறவினர் என மிரட்டுவதாக விவசாயி புகார்
/
செந்தில் பாலாஜி உறவினர் என மிரட்டுவதாக விவசாயி புகார்
செந்தில் பாலாஜி உறவினர் என மிரட்டுவதாக விவசாயி புகார்
செந்தில் பாலாஜி உறவினர் என மிரட்டுவதாக விவசாயி புகார்
ADDED : ஜூலை 08, 2025 05:00 AM

தஞ்சாவூர் : செந்தில் பாலாஜி உறவினர் எனக்கூறி, மனையை அபகரிக்க மிரட்டல் விடுப்பதாக, விவசாயி ஒருவர், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ரோடு, ஆரோக்கிய நகரை சேர்ந்தவர் விவசாயி ரவிராஜ், 58. இவர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் மனு:
தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் கிராமத்தில், எனக்கு, 22 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தற்போது வீட்டுமனையாக மாற்ற முயற்சித்து வருகிறேன். திருப்பூரில் உள்ள தனியார் பவர் எனர்ஜி நிறுவனத்தை சேர்ந்த சிலர், என் மனையில், சோலார் பிளான்ட் அமைத்தனர்.
அவர்களிடம் நான் விசாரித்த போது, 'தஞ்சாவூர் மாவட்டம், முன்னையம்பட்டி கிராமத்தில் பிளான்ட் அமைத்து, அரசுக்கு மின்சாரத்தை விற்க போகிறோம். இந்த கம்பெனி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமானது. இந்த கம்பெனியின் இயக்குநர் ஆறுமுகம் அசோக், செந்தில் பாலாஜியின் உறவினர்' என, தெரிவித்தனர்.
ஆறுமுகம் அசோக் என்னிடம் போனில் பேசி, சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். அங்கு அவர், 'நாங்க தான் அந்த இடத்துல சோலார் பிளான்ட் போட்டிருக்கோம்.
'நாங்க கொடுக்கிறத வாங்கிட்டு, இடத்தை பத்திரம் செய்து கொடுத்துவிட்டு ஓடி விடு; இல்லனா அண்ணன் செந்தில் பாலாஜிகிட்ட சொன்னா, உங்களை காலி பண்ணிடுவாரு; ஆட்சியே எங்களது தான்' என, கொலை மிரட்டல் விடுத்தார்.
என் நிலத்தில் அத்துமீறி பணியை தொடங்கிய ஆறுமுகம் அசோக் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

