ADDED : செப் 18, 2026 06:57 PM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: பாபநாசம் அருகே, விவசாயியை கத்தியால் குத்திக்கொன்ற மதியழகன், 58, ராஜ்குமார், 30, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி தளபதி, 60. அதே பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன்கள் ராஜ்குமார், பிரகாஷ், 28.
சத்தியமங்கலம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 'பேனர்' வைப்பது தொடர்பாக செப்., 16ல் தளபதிக்கும், மதியழகனுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மதியழகன், ராஜ்குமார், பிரகாஷ் ஆகியோர், நேற்று முன்தினம் தளபதி வீட்டிற்கு சென்று, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர்.
வழக்கு பதிந்த கபிஸ்தலம் போலீசார், தலைமறைவாக இருந்த மதியழகன், ராஜ்குமார் இருவரையும் நேற்று கைது செய்தனர். பிரகாஷை தேடி வருகின்றனர்.
