/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
யாராக இருந்தாலும் பணம் தான் மந்திரிகளிடம் விவசாயிகள் புகார்
/
யாராக இருந்தாலும் பணம் தான் மந்திரிகளிடம் விவசாயிகள் புகார்
யாராக இருந்தாலும் பணம் தான் மந்திரிகளிடம் விவசாயிகள் புகார்
யாராக இருந்தாலும் பணம் தான் மந்திரிகளிடம் விவசாயிகள் புகார்
ADDED : பிப் 07, 2024 01:04 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவ நெல் கொள்முதல் தொடர்பாக, விவசாயிகளுடனான கலந்தாய்வு கூட்டம், வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடந்தது.
விவசாயிகள் பேசியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு மாமூல் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு எப்படி தீர்வு கிடைக்கும் என தெரியவில்லை.
விவசாயிகள் முதல், அமைச்சர் வரை யார் நெல்லாக இருந்தாலும் கறாராக வசூல் நடக்கிறது. முதலில் விவசாயிகளுக்கு நெல் ஈரப்பதம் என்ற ஒன்றை காட்டி தான் அலுவலர்கள் வசூலை துவங்குகின்றனர்.
எனவே, மழைக்காலங்களில் நெல்லை உலர்த்த உலர் களங்களும், கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதத்தை உலர்த்தும், ட்ரையர் இயந்திரமும், நவீன டிஜிட்டல் எடை இயந்திரமும் வழங்க வேண்டும்.
நெல் கொள்முதல் செய்தவுடன் 48 மணி நேரத்தில், அங்கிருந்து நெல் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். காலம் தாழ்த்தி செய்வதால், எடையிழப்பும், முறைகேடுகளும் ஏற்படுகின்றன.
கொள்முதல் நிலையத்தில் இருந்து, குடோனுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் விரைவில் வந்து நெல்லை ஏற்ற மாமூல் கேட்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் மாமூல் பணத்தை, விவசாயிகள் தலையில் அலுவலர்கள் கட்டுகின்றனர்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
பின், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறும் போது, ''நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படவும், தினமும் ஆயிரம் முட்டைகள் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அப்போது, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.

