/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அமைச்சர் பதிலால் விவசாயிகள் அதிருப்தி
/
அமைச்சர் பதிலால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜன 06, 2024 12:32 AM
தஞ்சாவூர்:பாபநாசம் அருகே ஆதனுாரில் கால்நடை மருத்துவமனையைதிறந்து வைத்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு எதிராக 402வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் முருகேசன் தலைமையிலான கரும்பு விவசாயிகள் அமைச்சர் காரை மறித்தனர்.
அப்போது 'நாங்கள் 402வது நாளாகப் போராடுகிறோம். எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் பேசுகிறேன் என்று கூறினீர்களே என்னாச்சு' என அமைச்சரிடம் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் மகேஷ் ''இந்த பிரச்னை குறித்த போராட்டம் தான் முடிந்து விட்டதே; இன்னமும் ஏன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்... கோரிக்கைகள் இருந்தால் கலெக்டர் அலுவலகத்திற்கு வாருங்கள்'' என்று கூறி சென்றார்.
அமைச்சரின் பதிலால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். 'பிரச்னையை புரிந்து கொள்ளாமல் 'அனைத்தும் முடிந்து விட்டதே' என அமைச்சர் கூறுகிறாரே' என்றும் விரக்தி அடைந்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் 'திராவிட மாடலில் இதுவும் ஒன்றா என தெரியவில்லை' என்றனர்.