/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: நகல் எரித்து விவசாயிகள் போராட்டம்
/
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: நகல் எரித்து விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: நகல் எரித்து விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: நகல் எரித்து விவசாயிகள் போராட்டம்
UPDATED : பிப் 06, 2024 03:42 PM
ADDED : பிப் 06, 2024 03:08 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத் தீர்மான நகலை, கலெக்டர் தீபக் ஜேக்கபிடம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மனுவாக அளித்தார்.
பின், கலெக்டர் வளாகம் முன், மேகதாது அணை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் தீர்மான நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிருபர்களிடம் பாண்டியன் கூறியதாவது:
கடந்த 1ம் தேதி, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கை தொடர்பான ஓட்டெடுப்புக்கு தமிழக அரசின் பிரதிநிதியான நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும், அதில் பின் பங்கேற்று, தமிழகம் போராடி பெற்ற உரிமையை காவு கொடுத்து விட்டார். இது, முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது.
காவிரி மேலாண்மை ஆணையம் தன் அதிகார வரம்பையும் மீறியும், தமிழக நலனுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, ஆணையத்தின் முடிவை சட்ட விரோதம் என அறிவித்து, மத்திய அரசு ஏற்கக்கூடாது என தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

