/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஜெனரேட்டரில் மட்டுமே இயங்கும் மீன் மார்க்கெட்
/
ஜெனரேட்டரில் மட்டுமே இயங்கும் மீன் மார்க்கெட்
ADDED : செப் 03, 2025 02:44 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியின் தற்காலிக மீன் மார்க்கெட்டில், மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மீன் மார்க்கெட், ஜெனரேட்டரில் மட்டுமே இயங்குகிறது.
தஞ்சாவூர், கீழ் அலங்கம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 56 கடைகள், 60 சிறிய தரைக்கடைகளுடன், தற்காலிக மீன் மார்க்கெட் செயல்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம், ஒரு கடைக்கு 40 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில், ஒப்பந்ததாரர் தினமும் 100 ரூபாய் வசூல் செய்கிறார்.
அவர், மார்க்கெட் மின்சார பயன்பாட்டு கட்டணம் செலுத்தாதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வாரமாக ஜெனரேட்டர் பயன்படுத்தும் வியாபாரிகள், நேற்று, மாநகராட்சி கமிஷனர் கண்ணனிடம் புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில், 'மார்க்கெட் மின் இணைப்புக்கு உடனடியாக மின் கட்டணம் செலுத்த வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர்.