/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வலையில் சிக்கிய 'விண்ணி ' கடலிலேயே விட்ட மீனவர்கள்
/
வலையில் சிக்கிய 'விண்ணி ' கடலிலேயே விட்ட மீனவர்கள்
வலையில் சிக்கிய 'விண்ணி ' கடலிலேயே விட்ட மீனவர்கள்
வலையில் சிக்கிய 'விண்ணி ' கடலிலேயே விட்ட மீனவர்கள்
ADDED : நவ 25, 2024 04:55 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கொல்லுகாடு பகுதியைச் சேர்ந்த சேவியர், அந்தோணி ராஜ், ஜான்சன், ரோமன் ஆகிய நான்கு பேரும் கடலில் மீன்பிடித்த போது, கடல் பசுவை போன்ற தோற்றம் கொண்ட, மீனவர்களால் கடல் விண்ணி என அழைக்கப்படும் பாலுாட்டி, வலையில் சிக்கியது.
உடனே மீனவர்கள், மெதுவாக வலையில் சிக்கியதை மீண்டும் கடலில் விட்டனர். இதை வீடியோவாக பதிவு செய்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரனுக்கு அனுப்பினர்.
சந்திரசேகரன் கூறியதாவது:
கடல் விண்ணி என மீனவர்கள் அழைப்பது மீன் அல்ல; பாலுாட்டி இனம். கடல் பசுவை போல தோற்றம் உடைய இவை, இந்திய பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளிலும், பசிபிக் கடலிலும், இந்தோனேசியாவின் வடக்கே தைவான் ஜலசந்தி வரையிலும் காணப்படும். இவை அதிகபட்சமாக 30 - 45 கிலோ வரை வளரும். இவை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிக்க உதவும்.
தஞ்சாவூர் கடல் பகுதியில் 2009, 2023ம் ஆண்டுகளில் விண்ணி குட்டிகள் இறந்த நிலையில் ஒதுங்கின. தற்போது முதன்முறையாக இவ்வகை அரிய உயிரினத்தை பத்திரமாக மீட்டு, கடலில் விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.