/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
50 லட்சம் பேருக்கு வேலை அமைச்சர் ராஜா தகவல் தொழில் துறை அமைச்சர் தகவல்

ADDED : அக் 18, 2024 03:00 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், டைட்டல் பார்க்கில், புதிய தனியார் நிறுவனத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நிறுவனத்தை துவக்கி வைத்து கூறியதாவது:
மூன்றாண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தான், பெண்கள் அதிகளவில் அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக வேலைகளில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் தான் வேலைக்கு, படித்த இளைஞர்கள் கிடைக்கிற சூழல் உள்ளதாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர, முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத தொழிற்சாலைகள் வரலாம். இதனால், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தஞ்சாவூருக்கு வர உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.