/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
100 ஆண்டு பின்னர் ஓடிய கவுதமேஸ்வரர் கோவில் தேர்
/
100 ஆண்டு பின்னர் ஓடிய கவுதமேஸ்வரர் கோவில் தேர்
ADDED : பிப் 24, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கவுதமேஸ்வரர் கோவில் தேர், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்ததால், சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடந்து வந்தது.
கவுதமேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக தேர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 27.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மூன்று நிலைகளுடன் தேர் செய்யப்பட்டது. அந்த தேர், 21 டன் எடையில், 11.5 உயரத்திற்கு கலைநயமிக்க சிற்பங்களுடன் உருவாக்கப்பட்டது.
புதிய தேரோட்டம், 100 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர்.