/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அரசு விரைவு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 8 பேர் காயம்
/
அரசு விரைவு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 8 பேர் காயம்
அரசு விரைவு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 8 பேர் காயம்
அரசு விரைவு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 8 பேர் காயம்
ADDED : செப் 22, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, அரசு விரைவு பஸ் 20 பயணியருடன் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பழனிவேலு, 45, ஓட்டினார். தஞ்சாவூர், களிமேடு பகுதி வினோத், 40, கண்டக்டராக இருந்தார்.
பஸ், அய்யம்பேட்டை புறவழிச்சாலை திருப்பத்தில் திரும்பிய போது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். டிரைவர், கண்டக்டர் உட்பட, 22 முதல் 65 வயது வரையிலான ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இதில், ராஜசேகர் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அய்யம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.