/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஓடும் பஸ்சிலிருந்து குதித்து பட்டதாரி பெண் தற்கொலை
/
ஓடும் பஸ்சிலிருந்து குதித்து பட்டதாரி பெண் தற்கொலை
ஓடும் பஸ்சிலிருந்து குதித்து பட்டதாரி பெண் தற்கொலை
ஓடும் பஸ்சிலிருந்து குதித்து பட்டதாரி பெண் தற்கொலை
ADDED : ஆக 04, 2025 12:46 AM
திண்டிவனம்; தி ண்டிவனம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் அருணா, 32; பி.சி.ஏ., பட்டதாரி. ஷேர் மார்க்கெட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சகோதரி ரமா வீட்டில், தாயுடன் அருணா தங்கியிருந்தார். நேற்று அதிகாலை சென்னையிலிருந்து தனியார் ஆம்னி பஸ்சில் தாயுடன், கும்பகோணம் செல்வதற்காக வந்தார்.
அதிகாலை, 3:00 மணிக்கு திண்டிவனம் அருகே கூச்சிகுளத்துார் என்ற இடத்தில் ப ஸ் வந்தபோது, பஸ்சில் டிரைவர் சீட்டிற்கு பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்து வந்த அருணா, திடீரென ஓடும் பஸ்சிலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அருணா தலையில் ஏறியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.