/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சொத்து தர மறுத்த பாட்டியை வெட்டிக்கொன்ற பேரன் கைது
/
சொத்து தர மறுத்த பாட்டியை வெட்டிக்கொன்ற பேரன் கைது
சொத்து தர மறுத்த பாட்டியை வெட்டிக்கொன்ற பேரன் கைது
சொத்து தர மறுத்த பாட்டியை வெட்டிக்கொன்ற பேரன் கைது
ADDED : மே 15, 2025 02:53 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் சங்கரநாதர்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பையன் - தமயந்தி தம்பதிக்கு, மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், தமயந்தியின் இரண்டாவது மகள் ராஜீயின், மகன் சைமன், 25, பஸ் டிரைவர்.
சைமன் சில நாட்களாக, தன் அம்மாவிற்கு வர வேண்டிய சொத்து தொடர்பாக, பாட்டி தமயந்தியிடம் கேட்டு வந்தார். சொத்தை தர அவர் மறுத்தார். நேற்று மாலை தமயந்தி, வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த சைமன் சொத்து தொடர்பாக தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால், தமயந்தியின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பினார்.
இதில், தமயந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பியோடிய சைமனை கைது செய்தனர்.
அதுபோல நாமக்கல் மாவட்டம், மோகனுார் தெய்வானை, 80, என்பவரது பேரன் வினோத்பாபு, 42. இவர் மது குடிக்க பணம் தராததால் தெய்வானையை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றார். தலைமறைவாக உள்ள வினோத்பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.