/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தன்னுடன் வர மறுத்த மனைவியை 30 இடங்களில் வெட்டிய கணவன்
/
தன்னுடன் வர மறுத்த மனைவியை 30 இடங்களில் வெட்டிய கணவன்
தன்னுடன் வர மறுத்த மனைவியை 30 இடங்களில் வெட்டிய கணவன்
தன்னுடன் வர மறுத்த மனைவியை 30 இடங்களில் வெட்டிய கணவன்
ADDED : மார் 17, 2025 01:57 AM

தஞ்சாவூர்: தன்னுடன் வாழ வர மறுத்து, தந்தை வீட்டிற்கு சென்ற மனைவியை, 30 இடங்களில் சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சன்னங்குளத்தைச் சேர்ந்தவர் குமார், 40; விவசாய தொழிலாளி. இவரது மனைவி அனிதா, 36. மூன்று மகன்கள் உள்ளனர்.
குடும்ப செலவுக்கு, குமார் பணம் தராததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், அனிதா கோபித்துக் கொண்டு, குப்பங்குளத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார். குமார் பலமுறை அழைத்தும், அவர் வீட்டிற்கு வர மறுத்தார்.
ஆத்திரமடைந்த குமார் நேற்று மனைவியை தேடி குப்பங்குளம் சென்ற போது, வயல்வெளியில் அனிதா விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.
குமார் அவரை வீட்டுக்கு அழைத்த போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அவர் அனிதா வைத்திருந்த விறகு வெட்டும் அரிவாளை பிடுங்கி, அவரது கை, கால், தலை என, 30 இடங்களில் வெட்டினார்.
படுகாயமடைந்த அனிதா, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குமாரை கைது செய்தனர்.