தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது


ADDED : ஏப் 04, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே ஆடிட்டரை மிரட்டி, 1 கோடி ரூபாய் பறித்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே குலசேகரநல்லுாரில், கொள்ளிடம் பாலம் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது. இதில், கும்பகோணம்,ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன், 68, என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.

இந்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் வெட்டி, வேறு இடத்துக்கு கொண்டு சென்றார். இதையறிந்த வருவாய்த்துறையினர் மரங்களை பறிமுதல் செய்தனர்.

இதை அரியலுார் மாவட்டம், திருமாந்துறையை சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் நெப்போலியன், 45, தான் இன்ஸ்பெக்டர் எனவும், கலெக்டர் தன் உறவினர் எனவும் பேசி, நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வைப்பதாக கூறி, 1 கோடி ரூபாய் பெற்றுஉள்ளார்.

மேலும், அடிக்கடி ரவிசந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக, தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார். குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்து, நெப்போலியனை நேற்று இரவு கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us