/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'பழசுக்கு புதுசு' நகை திட்டம் ரூ.50 கோடி சுருட்டியவர் 'ஜூட்'
/
'பழசுக்கு புதுசு' நகை திட்டம் ரூ.50 கோடி சுருட்டியவர் 'ஜூட்'
'பழசுக்கு புதுசு' நகை திட்டம் ரூ.50 கோடி சுருட்டியவர் 'ஜூட்'
'பழசுக்கு புதுசு' நகை திட்டம் ரூ.50 கோடி சுருட்டியவர் 'ஜூட்'
ADDED : ஜூலை 26, 2025 08:03 AM
தஞ்சாவூர் : பழைய நகைகளை கொடுத்து, புதிய நகைகளை வாங்கிக் கொள்ளும் திட்டத்தை அறிவித்து, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிவிட்டு, தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர், சீனிவாசபுரத்தில் பல ஆண்டுகளாக மலேஷியா சுந்தரம் என்ற நகைக்கடையை ராஜா, 50, என்பவர் நடத்தி வந்தார். இவரது கடையில், சிறு சேமிப்பு நகை சீட்டு திட்டம், பழைய நகைகளை கொடுத்தால், குறைந்த செய்கூலி, சேதாரத்தில் புதிய டிசைனில் நகைகள் செய்து கொடுப்பது என, வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்து வந்தார்.
வாடிக்கையாளர்கள் பலர், இந்த திட்டத்தில் இணைந்தனர். சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு நகைகளை திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும், கட்டிய சீட்டுக்கு உரிய நகைகளும் கொடுக்கவில்லை. சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் பலர், நகைகளை திருப்பித் தர கேட்டனர். ஆனால், ராஜா காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில், மூன்று வாரங்களாக, நகைக்கடை மற்றும் இவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரித்த போது, ராஜா குடும்பத்துடன் தலைமறைவானது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த, 85-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் அளித்தனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால், நேற்று தஞ்சாவூர் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

