/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
18 ஆண்டுகளாக முடங்கி போன கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
/
18 ஆண்டுகளாக முடங்கி போன கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
18 ஆண்டுகளாக முடங்கி போன கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
18 ஆண்டுகளாக முடங்கி போன கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
ADDED : ஜன 19, 2025 02:51 AM
தஞ்சாவூர்:ஆங்கிலேயர் காலத்தில், தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் போர்டு நிர்வாகத்தினர், சவுத் இந்தியன் ரயில்வே கம்பெனி வாயிலாக கடந்த 1890ல் மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டைக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு, கடந்த 1894ம் ஆண்டு ஏப்., 2ம் தேதி, மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் இயக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த 1902ம் ஆண்டும், 1903ம் ஆண்டும், 1952ம் ஆண்டும் என முத்துப்பேட்டையில் இருந்து காரைக்குடி வரை ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 1961ம் ஆண்டில், சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும், போட் மெயில் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகள் பிரிக்கப்பட்டு, மயிலாடுதுறை - காரைக்குடி பாஸ்ட் பாசஞ்சர் ரயிலில் இணைக்கப்பட்டு இயங்கி வந்தது.இதில், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், திருவாரூரில் இருந்து சென்னைக்கு பயணியர் பயணம் செய்தனர்.
கடந்த 1980ம் ஆண்டு சென்னை - ராமேஸ்வரம் மெயிலில் இருந்து ஐந்து ரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மனோரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் முதலாவது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.
பின்னர், 1987ம் ஆண்டு மனோரா எக்ஸ்பிரஸ் ரயில் பெயரை கம்பன் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்யப்பட்டது. இது சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்பட்டது.கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும், இரவு நேர ரயிலாக டெல்டா பகுதியில் இருந்து, புறப்பட்டு காலையில் சென்னை எழும்பூருக்கு சென்று வந்தது.பின்னர், கடந்த 1997ம் ஆண்டு சென்னை - தாம்பரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக கம்பன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து- காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்பட்டது.பின்னர், 2006ம் ஆண்டு விழுப்புரம்- மயிலாடுதுறை மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கும் பணிக்காக கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.இதனால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். நிறுத்தப்பட்ட கம்பன் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பன் எகஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்க நடவடிக்கைப்படும் என தி.மு.க., - எம்.பி.,யும் தன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
இது குறித்து பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் விவேகானந்தம் கூறியதாவது:
மயிலாடுதுறை -காரைக்குடி அகல ரயில் பாதையின் அடையாளமாக, திகழ்ந்த கம்பன் எக்ஸ்பிரஸ், 18 ஆண்டுளாகியும் இதுவரை இயக்கப்படவில்லை. இது வெறும் ரயில் மட்டும் அல்ல. தேங்காய், மீன், உப்பு, செட்டிநாடு வார்த்தகத்தின் உறவாக திகழ்ந்தது.
எனவே, கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை, சென்னை எழும்பூரில் இரவு நேரத்தில் புறப்பட்டு காரைக்குடி வரையிலும், மீண்டும் இரவு சுமார் 7:00 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு சென்னை எழும்பூர் வரை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.