ADDED : ஏப் 11, 2026 03:48 AM

அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர், அகிலாம்பாள்பேட்டையை சேர்ந்தவர் அம்சு, 72; கீரை வியாபாரி. இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். கணவரை இழந்த அம்சு, தனியாக வசித்தார். நேற்று, இவர், வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அப்பகுதியினர் பார்த்த போது, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்று பார்த்த போது, தலை மற்றும் முகத்தில் மண்வெட்டியால் வெட்டப்பட்டு, அவர், வீட்டின் உள்ளே படுகொலை செய்யப்பட்டது தெரிந்தது.
மேலும், அருகே, மண்வெட் டி, மதுபாட்டில்கள் கிடந்தன. அத்துடன் வீட்டில் உள்ள பொருட்கள், கீரை கட்டுகள் சிதறி கிடந்தன.
போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.
