/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மாணவிக்கு தொல்லை தந்த மருத்துவ மாணவருக்கு 'காப்பு'
/
மாணவிக்கு தொல்லை தந்த மருத்துவ மாணவருக்கு 'காப்பு'
மாணவிக்கு தொல்லை தந்த மருத்துவ மாணவருக்கு 'காப்பு'
மாணவிக்கு தொல்லை தந்த மருத்துவ மாணவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 24, 2025 12:13 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், மருத்துவ கல்லுாரியில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர், மருத்துவ கல்லுாரியில், பட்டய படிப்பு பயிலும் மாணவிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன், அங்கு முதுநிலை மருத்துவம் படித்த மாணவர் கோபிநாத், 35, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மாணவி, விசாகா கமிட்டிக்கு புகார் மனு அனுப்பினார்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, கடந்த 21ம் தேதி, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து, மருத்துவக் கல்லுாரி முதல்வர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விசாகா கமிட்டி பரிந்துரைப் படி, மாணவர் கோபிநாத் கல்லுாரியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மாணவி அளித்த புகாரின்படி, கோபிநாத் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து, நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.