/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அமைச்சரின் விழாவில் 'மப்பு' கூட்டுறவு அதிகாரி 'சஸ்பெண்ட்'
/
அமைச்சரின் விழாவில் 'மப்பு' கூட்டுறவு அதிகாரி 'சஸ்பெண்ட்'
அமைச்சரின் விழாவில் 'மப்பு' கூட்டுறவு அதிகாரி 'சஸ்பெண்ட்'
அமைச்சரின் விழாவில் 'மப்பு' கூட்டுறவு அதிகாரி 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 20, 2025 02:14 AM

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று முன்தினம், கூட்டுறவுத்துறையின், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
இதில், உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், திருவையாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா மேடையில், அமைச்சர் பேசியபோது, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில், கள மேலாளராக, பணியாற்றும் பட்டீஸ்வரத்தை சேர்ந்த செல்வராஜ், 50, மது போதையில், சிரித்து கூச்சலிட்டப்படி இருந்தார்.
இதையடுத்து, மேடையில் இருந்த கூட்டுறவு ஊழியர்கள், செல்வராஜை மேடையில் இருந்து அப்புறப்படுத்தி, போலீசார் உதவியுடன் அங்கிருந்த அறைக்குள் அடைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான பெரியசாமி, நேற்று போதையில் அடாவடி செய்த அலுவலரான செல்வராஜை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.