/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு
/
மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு
மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு
மாணவனை அடித்து கொன்ற விவகாரம் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு
ADDED : டிச 08, 2025 04:44 AM

தஞ்சாவூர்: சக மாணவர்கள் தாக்கி பிளஸ் 2 மாணவர் இறந்த விவகாரத்தில் 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், டிச., 3ம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
பிளஸ் 1 மாணவர்கள், 15க்கும் மேற்பட்டோர், டிச., 4ம் தேதி பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதி வழியாக வந்த, அதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கவியரசன், 17, என்பவரைக் கட்டையால் தாக்கினர்.
போலீசார் 15 மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து டிச., 5ம் தேதி தஞ்சாவூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
இதற்கிடையில், நேற்று நள்ளிரவு 2:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி கவியரசன் இறந்தார். தொடர்ந்து, கவியரசனை தாக்கிய மாணவர்கள் மீது பட்டீஸ்வரம் போலீசார் அடிதடி, கொலை உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
கவியரசனின் தாய் ராஜலட்சுமி கூறுகையில், “கவியரசனை 25 பேர் சேர்ந்து அடித்துக் கொன்றனர். அரசுப் பள்ளி மாணவன் என்ற முறையில், அமைச்சரோ, கலெக்டரோ வந்து பார்க்கவில்லை. பட்டீஸ்வரம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடக்கிறது.
“கஞ்சாவைப் பயன்படுத்தித்தான் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர். போலீசார் 15 பேரைத்தான் கைது செய்துள்ளனர். அனைவரையும் கைது செய்ய வேண்டும்,” என்றார்.

