/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'ஏழைகளின் ஆக்கிரமிப்புகளே அகற்றம் பணக்காரர்கள் பக்கம் செல்வதேயில்லை' : அதிகாரிகள் மீது வக்கீல் யானை ராஜேந்திரன் புகார்

ADDED : அக் 27, 2025 11:56 PM

தஞ்சாவூர்: “நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள், பணபலம் மிக்கவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்,” என, வக்கீல் யானை ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 44 குளங்கள், 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கோரி, வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. ஆனால், சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், வக்கீல் யானை ராஜேந்திரன், கரும்பாயிரம் பிள்ளையர் கோவில் பகுதியில் தேப்பெருமாநல்லுார் வாய்க்காலில் நேற்று பார்வையிட்டார்.
பின், அவர் கூறியதாவது:
அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டதாக, அதிகாரிகள் பதில் கொடுத்துள்ளனர். சாதாரண மக்கள், வசதி இல்லாதவர்கள் என, 700 பேரின் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிஉள்ளனர்.
ஆனால், வாத்தான்கட்டளை, தேப்பெருமாநல்லுார், உள்ளூர், ஓலப்பட்டினம் வாய்க்காலில் 250 ஆக்கிரமிப்புகள் உள்ளன. எல்லாம் பெரிய பெரிய கட்டடங்கள்.
இவை அனைத்தும் பணபலம் மிக்கவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டவை. அதிகாரிகள் அவர்களிடம் செல்வதில்லை. ஆக்கிரமிப்பு அகற்றாத பலனை இப்போது அனுபவிக்கிறோம்.
இப்படியே நீடித்தால்,கோவில் நகரமான கும்பகோணம், சாக்கடை நகராக மாறிவிடும். அதிகாரிகள் மெத்தனப்போக்கை விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.