/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கும்பகோணத்தை சுற்றியுள்ள முருகன் கோயில் ஒரே நாளில் தரிசனம் செய்ய வாய்ப்பு

ADDED : அக் 17, 2024 02:51 AM
தஞ்சாவூர்:அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் ஆறு முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பஸ் சேவை அக். 19ம் தேதி முதல் துவக்கப்படுகிறது.
கும்பகோணம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ் சேவை புறப்பட்டு, ஒரே நாளில் திருவாரூர் மாவட்டம் எண் கண் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலன் கோயில், பொரவச்சேரி கந்தசாமி கோயில், நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஏரகரம் ஆதிசுவாமிநாதசுவாமி கோயில் என ஆறு கோயில்களையும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக, ஆறுமுருகன் திருத்தலங்களுக்கு சுற்றுலா பஸ் இயக்கப்படுகிறது.
இதற்கு நபர் ஒன்றுக்கு கட்டணமாக, 650 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யலாம்;
நேரடியாக பஸ்சில் பயண சீட்டு பெற்றுக் கொள்ள முடியாது. போக்குவரத்து துறை இணையதளம் வாயிலாக தான் டிக்கெட் பெற முடியும்.
இதற்கான முதல் சேவை அக்.19ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.