ADDED : ஜன 02, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டையைச் சேர்ந்த ராகுல்காந்தி, 22. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, தன மொபைல் போனில் அந்த சிறுமியை போட்டோ எடுத்து வைத்து இருந்தார்.
சிறுமியின் போட்டோவை, ராகுல்காந்தி சமூக வலைதளத்தில், தவறான நோக்கத்தில் பதிவேற்றம் செய்து, பரப்பினார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருவையாறு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராகுல்காந்தியை நேற்று கைது செய்தனர்.