/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஆசிரியை வீட்டில் 58 பவுன் திருடிய உறவினர் கைது
/
ஆசிரியை வீட்டில் 58 பவுன் திருடிய உறவினர் கைது
ADDED : ஏப் 19, 2025 01:09 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரத்தை சேரந்த பாலசுப்பிரமணியன், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி வளர்மதி அய்யம்பேட்டை அரசு பள்ளி உதவி தலைமையாசிரியை.
ஏப்., 10ம் தேதி பாலசுப்பிரமணியன் நகைகளை அடகு வைக்க, பீரோவை திறந்த போது, 58 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன. தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
பாலசுப்பிரமணியன் வீடு, தெருக்களில் உள்ள கேமராா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பாலசுப்பிரமணியனின் உறவினர் சுதாகர், 39, அடிக்கடி வந்து, சென்றது தெரியவந்தது. சுதாகரிடம் போலீசார் விசாரித்தனர்.
இதில், நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். சுதாகரை நேற்று கைது செய்து, 58 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.
வளர்மதி வீட்டில் மறைவான இடத்தில் சாவியை வைப்பது வழக்கம். இதை நோட்டமிட்ட சுதாகர், மார்ச் 31ல் நகைகளை திருடியுள்ளார் என, போலீசார் தெரிவித்தனர்.