/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
போலீஸ் எனக்கூறி ரூ.44.59 லட்சம் பறிப்பு
/
போலீஸ் எனக்கூறி ரூ.44.59 லட்சம் பறிப்பு
ADDED : டிச 11, 2025 05:14 AM
தஞ்சாவூர்: நகைக்கடை உரிமையாளரின் தம்பியை மிரட்டி, 44.59 லட்சம் ரூபாய் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 36. இவரது தம்பி ரமேஷ். இருவரும், மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில், நகை அடகு கடை வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம், ரமேஷ், தன் தம்பி அர்ஜூன், 19, மற்றும் கடையில் வேலை பார்க்கும் பிரதீபன், 22, ஆகியோர், தஞ்சாவூரில் நகை விற்பனை செய்த பணம், 44.59 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, மன்னார்குடிக்கு தனியார் பஸ்சில் சென்றனர்.
பஸ் வாண்டையார் இருப்பு நிறுத்தத்தில் நின்றபோது, அதே பஸ்சில் பயணம் செய்த ஒருவர், அர்ஜூன், பிரதீபனிடம் தன்னை போலீசார் எனவும், இருவரையும் விசாரிக்க வேண்டும் எனக்கூறி, பஸ்சில் இருந்து கீழே இறக்கியுள்ளார்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த மற்றொரு நபர் தன்னையும் போலீஸ் என கூறி, அர்ஜூன், பிரதீபன் இருவரையும் மிரட்டி, அவர்கள் வைத்திருந்த பணப்பையை வங்கிக்கொண்டு தப்பினர். தகவலறிந்த கார்த்தி, தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகாரளித்தார். போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

