/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே அனுப்பும் திட்டம்
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே அனுப்பும் திட்டம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே அனுப்பும் திட்டம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே அனுப்பும் திட்டம்
ADDED : மார் 21, 2025 11:51 PM

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, வீடுகளுக்கே தபால் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில், 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும், ஆறு அரசு மருத்துவமனைகளும் உள்ளன.
இம்மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும், மருத்துவமனைகளில் இறப்பவர்களுக்கும் சான்றிதழ்கள் மாநகராட்சி மூலம் வழங்கப்படுகின்றன.
மாநகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளுவது தான் நடைமுறையில் உள்ளது.
இதையடுத்து, பொதுமக்களின் அலைச்சலை குறைக்கும் வகையில், விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வார காலத்திற்குள், அவர்கள் கேட்ட சான்றிதழ்கள் பதிவு அஞ்சல் மூலம், வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் புதிய நடைமுறையை, நேற்று மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார்.
அப்போது, 30 பேருக்கு பிறப்பு சான்றிதழ்களை அஞ்சல் துறை ஊழியர்களிடம் மேயர் வழங்கினார்.
இந்நிகழ்வில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் கண்ணன், மாநகர நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.