ADDED : மே 07, 2025 01:49 AM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த, பெண் ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, தன், 14 வயது மகளிடம் வீட்டிற்கு சென்று, மொபைல் போனை எடுத்து வரக்கூறி அனுப்பியுள்ளார்.
சிறுமி போனை எடுத்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நளன், 24, அந்த சிறுமியை வழி மறித்து, மொபைல் போன் எண்ணை கேட்டு மிரட்டியுள்ளார்.
மேலும், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாய், வல்லம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். போலீசார் போக்சோவில் நளனை கைது செய்தனர்.
